உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெயர்க்கப்பட்ட இடத்தில் மீண்டும் சாலை அமைப்பு

பெயர்க்கப்பட்ட இடத்தில் மீண்டும் சாலை அமைப்பு

கே.கே., நகர், கோடம்பாக்கம் மண்டலம், கே.கே., நகர் முனுசாமி சாலை மற்றும் பி.டி., ராஜன் சாலையை இணைக்கும் வகையில், லட்சுமணசாமி சாலை உள்ளது.மாநகராட்சியின் பேருந்து வழித்தட துறை பராமரிப்பில் உள்ள இச்சாலை, 1.30 கி.மீ., துாரம் உடையது. இதில், குடிநீர் வாரியம் சார்பில், பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் நடந்தன.அப்பணிகள் முடிந்த பின், அந்த பள்ளத்தில்சிமென்ட் கலவை கொட்டி சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து, சாலையை சீரமைக்க, இரு மாதங்களுக்கு முன், மாநகராட்சி சார்பில் 'மில்லிங்' செய்யப்பட்டது.ஆனால், அதிகாரிகள் முறையாக கண்காணிக்காததால், மில்லிங் செய்யப்படாத இடத்தில், தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இதனால் சாலை மட்டம் உயர்ந்து, அப்பகுதியினர் சிரமப்படுகின்றனர்.அதேநேரம், மில்லிங் செய்த பகுதிகளில் இரு மாதங்கள் கடந்தும், தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, விடுபட்ட பகுதிகளில் நேற்று, மாநகராட்சி சார்பில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !