சாலை வெட்டு பணிகள் இன்று முதல் நிறுத்தம்
செனாய் நகர், சென்னை மாநகராட்சி சார்பில், முதல் கட்டமாக, 16 பள்ளிகளில், 1.60 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரத்தை மேயர் பிரியா, நேற்று பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அவர் அளித்த பேட்டி: சென்னையில், இம்மாதம் 17 முதல் பருவமழை துவங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர், டிசம்பரில், அதிக மழை இருக்கும் என்பதால், தாழ்வான பகுதிகளில் வசிப்போரை சமூக நலக்கூடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்படும். மீட்பு பணிகளுக்கு படகுகள் ஏற்பாடு செய்யப்படும். இன்று முதல் அனைத்து இடங்களிலும், சாலை வெட்டு பணிகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டு, மழைக்குப்பின் ஜனவரி மாதத்திலிருந்து பணிகள் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.