ஓ.எம்.ஆரில் சாலை புதுப்பிப்பு
சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலம், 198வது வார்டு, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கம் பகுதியில், 800 மீட்டர் நீளம் உடைய நான்கு தெருக்களில், சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. அதேபோல், 200வது வார்டு, செம்மஞ்சேரியில் 3.6 கி.மீ., துாரத்தில், 16 தெருக்கள் பழுதடைந்து உள்ளன.இதனால், 800 மீட்டர் நீளத்தில் சிமென்ட் சாலையும், 3.6 கி.மீ., துாரத்தில் தார்ச்சாலையும் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக, மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருவதாக, அதிகாரிகள் கூறினர்.