உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புளியந்தோப்பில் ரவுடிகள் அட்டூழியம்

புளியந்தோப்பில் ரவுடிகள் அட்டூழியம்

புளியந்தோப்பு,:புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 21. இவர், ஸ்பென்சர் பிளாசாவில் வேலை செய்து வந்தார்.இவர், நேற்று முன்தினம் இரவு நரசிம்மன் நகர், படவேட்டம்மன் கோவில் தெரு அருகே, பைக்கில் சென்றபோது, போதை கும்பல் ஒன்று, தகராறு செய்து கத்தியால் வெட்டியது. இதில், ஸ்ரீதரின் இடது கையில் வெட்டு விழுந்தது. அந்த வழியாக வந்த, கன்னிகாபுரத்தை சேர்ந்த ராகுல் என்பவரையும், போதை கும்பல் தாக்கியுள்ளது.இதில் பலத்த காயமடைந்த இருவரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ராகுலுக்கு, தலை, கை உள்ளிட்ட பகுதிகளில், 21 தையல் போடப்பட்டுள்ளது. ஸ்ரீதருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.புளியந்தோப்பு போலீசாரின் விசாரனையில், புளியந்தோப்பைச் சேர்ந்த, சஞ்சய், 20, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது. அக்கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !