உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமியிடம் அத்துமீறிய ரவுடி போக்சோ வழக்கில் கைது

சிறுமியிடம் அத்துமீறிய ரவுடி போக்சோ வழக்கில் கைது

தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டையை சேர்ந்த, 15 வயது சிறுமி, வீட்டருகேயுள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 1 படித்தார். இவர், வாலிபர் ஒருவருடன் நெருக்கமாக அமர்ந்தபடி டூ - வீலரில் செல்வதை பார்த்த பள்ளி ஆசிரியர்கள், சிறுமியின் தாயை அழைத்து கண்டித்தனர்.தாய் விசாரித்தபோது, 'வண்ணாரப்பேட்டை, ஆண்டியப்பன் தெருவைச் சேர்ந்த மதன் 20, என்பவரை காதலித்து வருகிறேன்.அவர் என்னை ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்த சென்று, தன்னிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டார்' என, மகள் கூறியுள்ளார்.அதிர்ச்சியடைந்த தாய், தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்த போலீசார் நேற்று, மதனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி