உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரவுடி நாகேந்திரன் தங்கை 3வது வழக்கு பதிந்து கைது

ரவுடி நாகேந்திரன் தங்கை 3வது வழக்கு பதிந்து கைது

வியாசர்பாடி,வியாசர்பாடி, 4வது பள்ளத் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவர் ரவுடி நாகேந்திரனின் தங்கை கற்பகத்திடம், 46, 1 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். இந்த கடனுக்கு வட்டி, அசலுடன் சேர்த்து முருகன், 1.5 லட்சம் ரூபாய் வரை வழங்கியுள்ளார்.ஆனாலும், கற்பகம் மேலும் 3 லட்சம் ரூபாய் வேண்டுமென கேட்டு மிரட்டி வந்ததால், கற்பகத்தையும், அவரது கணவர் சதீஷையும் வியாசர்பாடி போலீசார் கைது செய்தனர்.அதேபோல், மேலும் ஒரு வழக்கில் கற்பகம், அவரது கணவர் சதீஷ் ஆகியோரை, போலீசார் கைது செய்துள்ளனர்.இந்நிலையில், தன் மகனுக்கு புற்று நோய் சிகிச்சை செலவுக்காக மதிவதனம், 56, என்பவர், கற்பகம், அவரது கணவர் சதீஷிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்ற நிலையில் 40 ஆயிரம் ரூபாய் திரும்ப செலுத்தி உள்ளனர்.மீதமுள்ள 10,௦௦௦ ரூபாய்க்கு அதிக வட்டி கேட்டதோடு, வீடு சென்றும் கை மற்றும் உருட்டுக் கட்டையால் தாக்கி உள்ளனர். இதையடுத்து கற்பகம், அவரது கணவர் ஆகியோர் ஏற்கனவே, இரண்டு வழக்கில் கைதான நிலையில், தற்போது இந்த வழக்கிலும் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ