ரவுடியின் தங்கை கைது
சென்னை, கஞ்சா வழக்கில் ரவுடி நாகேந்திரன் தங்கை கைது செய்யப்பட்டார்.சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கற்பகம், 42. இவர், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான ரவுடி நாகேந்திரனின் தங்கை.வரும், 5ம் தேதி, ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு தினம் வருகிறது. இதையொட்டி ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், செம்பியம் போலீசார், கஞ்சா வழக்கில் கற்பகத்தை நேற்று கைது கைது செய்தனர்.*