உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி பிளேஸ் வாலிபாலில் முன்னிலை

ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி பிளேஸ் வாலிபாலில் முன்னிலை

சென்னை,சென்னையில் நடந்து வரும் பள்ளிகளுக்கு இடையிலான 'பிளேஸ்' வாலிபால் போட்டியில், ராயபுரம், செயின்ட் பீட்டர் பள்ளி புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக, 'பிளேஸ் வாலிபால் லீக்' முதலாவது சீசன் போட்டி, சென்னையில் பல்வேறு பள்ளிகளில் நடக்கின்றன.இந்த சீசனில் செயின்ட் பீட்ஸ், செயின்ட் மேரீஸ், மான்போர்ட்டு, டான்பாஸ்கோ,- கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ., - சேது பாஸ்கரா, செயின்ட் பீட்டர்ஸ் என, எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.போட்டிகள், 'லீக்' முறையில், ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு பள்ளிகளில், நடக்கின்றன. இந்த சீசனில் முதல் முறையாக, சமீபத்தில் பெசன்ட் நகர் கடற்கரையில் லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. மழையால், தற்காலிகமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. மீண்டும் போட்டிகள், 5ம் தேதி முதல் நடக்கிறது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில், ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி, புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை