உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அங்கன்வாடி மையம், இரவு காப்பகத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு

அங்கன்வாடி மையம், இரவு காப்பகத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு

வேளச்சேரி:அடையாறு மண்டலம், 175வது வார்டு, அம்பேத்கார் நகர், 20வது குறுக்கு தெருவில் ஒரு இரவு காப்பகம் உள்ளது. பழைய கட்டடமாக உள்ளதால், இடித்துவிட்டு தரை மற்றும் முதல் தளமாக கட்ட, மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கு, 87 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.அதே வார்டில், நேருநகரில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட, 13.00 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒப்பந்தம் விட்டு, விரைவில் பணி துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை