வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எவ்வளவு சொன்னாலும் படிச்சவங்களோ படிக்காதவங்களோ பேராசையிலிருந்து வெளியில் வர மாட்டேங்கறாங்க . பேராசை பெருநஷ்டம். அனுபவிக்கட்டும்
சென்னை, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார்.அதில், சமூக வலைதளத்தில் வந்த 'ஆன்லைன்' முதலீட்டு விளம்பரத்தை பார்த்தேன். அதில் இருந்த எண்ணில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, 'வாட்ஸாப் குழு' ஒன்றில் இணைய கூறினர். பின், வாட்ஸாப்பில் வந்த முதலீட்டு செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தேன்.அவற்றில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியதால், பல்வேறு தவணையாக, 10.27 கோடி ரூபாய் செலுத்தினேன். செலுத்திய பணத்திற்கு ஏற்றவாறு, அதிக லாபம் வந்தது போலவும், முதலீடு செய்யப்பட்டது போலவும் செயலியில் காண்பித்தது.பின் முதலீடு செய்த பணத்தை எடுக்க முற்பட்டபோது, 'வாட்ஸாப்' குழுவில் இணைத்தவர்கள், பல்வேறு காரணங்களை கூறி, மேலும் பணம் கேட்டு வற்புறுத்தினர்.அதன் பின்னரே ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். எனவே தன்னிடம் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இதில், பொழிச்சலுாரைச் சேர்ந்த ராஜேஷ் ராம், 36, கே.கே., நகரைச் சேர்ந்த சீனிவாசன், 43, ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், மோசடிபேர்வழிகள் பணத்தை மலேஷியாவில் உள்ள ஏஜன்டுகளுக்கு அனுப்பியது தெரியவந்தது.நேற்று இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, மூன்று மொபைல் போன்கள், இரண்டு ஆதார் கார்டுகள், பான் கார்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
எவ்வளவு சொன்னாலும் படிச்சவங்களோ படிக்காதவங்களோ பேராசையிலிருந்து வெளியில் வர மாட்டேங்கறாங்க . பேராசை பெருநஷ்டம். அனுபவிக்கட்டும்