உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விளையாட்டு அரங்கு அமைக்க ரூ.1.65 கோடி ஒதுக்கீடு

விளையாட்டு அரங்கு அமைக்க ரூ.1.65 கோடி ஒதுக்கீடு

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில், மாணவ - மாணவியரின் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்த, 50 லட்சம் ரூபாய் செலவில், 5 இடங்களில், 'பிக்கிள் பால்' மற்றும் 5 இடங்களில் 'டென்னிஸ் கோர்ட்' அமைக்கப்படும் என, அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து, 1, 2, 3, 4, ஆகிய நான்கு மண்டலங்களில், 72 லட்சம் ரூபாய் செலவில், 'பிக்கிள் பால் கோர்ட்', 92.9 லட்சம் ரூபாய் செலவில் 'டென்னிஸ் கோர்ட்' அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 1வது மண்டலம் அருள்பாண்டியன் பூங்கா, 3வது மண்டலம் ராதே ஷ்யாம் அவென்யூ பூங்கா, 4வது மண்டலம் சாய் நகர் 5வது பிரதான சாலை பூங்கா, 2வது மண்டலம் பல்லவா கார்டன் அசோகா பார்க், லட்சுமி நகர், சித்ரா டவுன்சிப் பூங்கா ஆகிய இடங்களில், 'பிக்கிள் பால் கோர்ட்' அமைக்கப்பட உள்ளது. அதேபோல், 1வது மண்டலம் ஸ்ரீனிவாசபுரம் பூங்கா, 2வது மண்டலம் சுபம் நகர் பார்ட் - 2, 3வது மண்டலம் காயத்ரி நகர் பிரதான சாலை, 4வது மண்டலம் சாய் நகர் 5வது பிரதான சாலை பூங்கா ஆகிய இடங்களில், 'டென்னிஸ் கோர்ட்' அமைக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை