விதி மீறிய வாகனங்களுக்கு ரூ.25 லட்சம் அபராதம்
ஆலந்துார்: மீனம்பாக்கம், ஆர்.டி.ஓ., சார்பில், கடந்த மாதம் நடத்தப்பட்ட வாகன சோதனையில், விதிமுறை மீறிய, 92 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, 25.26 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நான்கு வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டன. ஆலந்துாரில் மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. ஆர்.டி.ஓ., அருணாச்சலம் தலைமையில், ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர், கடந்த மாதம், 189 வாகனங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, அதிக பாரம் ஏற்றுவது, அதிவேகமாக வாகனங்களை இயக்குவது, ஆவணங்கள் புதுப்பிக்காமல், இல்லாமல் இருப்பது உள்ளிட்ட விதிமுறைகளை மீறிய, 92 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, அபராதமாக, 25.26 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதில், 20 சரக்கு வாகனங்கள், பயணியரை ஏற்றிய, 10 போக்குவரத்து அல்லாத வாகனம், 7 ஆம்னி பேருந்துகள், 14 நேஷனல் பர்மிட் டாஸ்சிகள், 14 அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள் ஆகியவை அடங்கும். நான்கு வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டன.