மேலும் செய்திகள்
குப்பை கொட்டிய 22 பேருக்கு அபராதம்
29-Nov-2024
சென்னை, சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டுதல், கொசு உற்பத்திக்கு வழிவகுத்தல் உள்ளிட்டவற்றுக்காக, 18,641 பேரிடம் இருந்து, 2.54 கோடி ரூபாயை, மாநகராட்சி அபராதமாக வசூலித்துள்ளது.சென்னை மாநகராட்சியில், பொது இடங்களில் குப்பை கொட்டுதல், சாலையில் மாடுகள் திரிதல், கொசு உற்பத்திக்கு காரணமாக இருத்தல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றிற்கு, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அதன்படி, பொது இடங்களில் குப்பை கொட்டுதலை தடுக்க, 15 ரோந்து வாகனங்கள் இருப்பதுடன், அபராத தொகை, 500 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.அதேபோல், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறையும் அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில், விதிகளை மீறியவர்களை கண்டறிந்து, மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த வகையில், இந்தாண்டில் இதுவரை, 18,641 பேரிடமிருந்து, 2.54 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மத்திய வட்டாரத்தில், 1.15 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் கூறுகையில், ''அபராதம் வசூலுக்கானது அல்ல. மீண்டும் மக்கள் தவறு செய்யாமல் இருக்கவே, அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.''தற்போது பெருமளவு நீர்நிலைகளில் குப்பை கொட்டுவது குறைந்துள்ளது. சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. விரைவில் மக்களிடையே மாற்றம் வரும்,'' என்றார்.
29-Nov-2024