உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.3.13 லட்சம் கையாடல் பர்னிச்சர் நிறுவன ஊழியர் கைது

ரூ.3.13 லட்சம் கையாடல் பர்னிச்சர் நிறுவன ஊழியர் கைது

சென்னை, ஹோம் பர்னிச்சர் நிறுவன அலுவலக கணக்கில் இருந்த, 3.13 லட்சம் ரூபாயை, உறவினருக்கும், நண்பருக்கும் முறைகேடாக பரிமாற்றம் செய்து, பணம் கையாடல் செய்த ஊழியரை, போலீசார் கைது செய்தனர்.சூளை, பேக்கர்ஸ் தெருவைச் சேர்ந்தவர் உட்சேவ், 38. கடந்த 10 ஆண்டுகளாக, அதே பகுதியில் ஹோம் பர்னிச்சர் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது நிறுவனத்தில், கடந்த 2 ஆண்டுகளாக கணக்காளராக, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த குணா, 33, என்பவர் பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், அலுவலக கணக்குகளை உரிமையாளர் சரிபார்த்தபோது, 3.13 லட்சம் ரூபாயை, குணா அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பியது தெரியவந்தது. இது குறித்து விடுப்பில் இருந்த குணாவிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு உரிமையாளர் கேட்டபோது, சரியான பதில் அளிக்காமல் மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்து உள்ளார்.பெரியமேடு போலீசில் ஆக., 5ம் தேதி புகார் அளிக்கப்பட்டிருந்தது. இது குறித்து விசாரித்த போலீசார், குணாவை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி