உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுனாமி குடியிருப்பை சீரமைக்க ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு

சுனாமி குடியிருப்பை சீரமைக்க ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு

எழில்நகர்: மிகவும் சேதமடைந்துள்ள சுனாமி குடியிருப்பை சீரமைக்க, 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, சுனாமி குடியிருப்பில் 2,048 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு கட்டி, 10 ஆண்டுக்கு மேல் ஆகிறது. பல இடங்களில் விரிசல், மழைநீர் ஒழுகுதல், பூச்சு பெயர்ந்து விழுவது, குடிநீர், கழிவுநீர் குழாய்கள் சேதம் போன்ற பிரச்னைகள் உள்ளன. இதனால், இந்த குடியிருப்பை சீரமைக்க, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், 8 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை