மேலும் செய்திகள்
ரூ.3 கோடி கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல்
14-Sep-2025
சென்னை; தாய்லாந்து நாட்டில் இருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 9.50 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக கஞ்சாவை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து, 'தாய் ஏர்லைன்ஸ்' விமானம், சென்னை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்தது. அதில் வந்த வடமாநில பயணியை நிறுத்தி, அவரது உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்ததில், உணவு பொருட்கள் பாக்கெட்டில் 7.5 கிலோ உயர் ரக கஞ்சா கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு, 7.50 கோடி ரூபாய். இதேபோல் பாங்காக்கில் இருந்து 'இண்டிகோ' விமானம் வந்தது. அதில் வந்த இரு பயணியரை சோதனை செய்ததில், 2 கிலோ உயர் ரக கஞ்சா இருப்பது உறுதியானது. அதன் மதிப்பு, 2 கோடி ரூபாய். பிடிபட்ட மூன்று பேரும், போதை பொருட்களை கடத்தி சப்ளை செய்யும் கும்பல்களைச் சேர்ந்தோர் என தெரிய வந்துள்ளது. மூன்று பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். இந்த கடத்தலில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
14-Sep-2025