உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாலிபரின் உயிரை பறித்த ரம்மி

வாலிபரின் உயிரை பறித்த ரம்மி

சென்னை,சைதாப்பேட்டை, சின்னமலை, ஆரோக்கிய மாதா நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ், 26. இவர், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்திருந்தார்.போதிய வேலை, சம்பளம் கிடைக்காத நிலையில், 'ஆன்லைன்' ரம்மி விளையாட துவங்கி உள்ளார். முதலில் அவருக்கு, பணம் கிடைத்துள்ளது. இதனால் அதிக பண ஆசையில் தொடர்ந்து விளையாடியுள்ளார். அவரது தாயின் சிகிச்சைக்கு வைத்திருந்த, 30,000 ரூபாயையும் வைத்து விளையாடி உள்ளார்.ஆனால், 'ஆன்லைன்' ரம்மி மோசடியில் சிக்கி, அனைத்து காசையும் இழந்துள்ளார். இதையறிந்து தாய் கண்டித்து உள்ளார். இதனால் மனவருத்தம் அடைந்த ஆகாஷ், நேற்று வீட்டின் மாடியில் உள்ள அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி