உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரேஷனில் காலாவதியான உப்பு விற்பனை?

ரேஷனில் காலாவதியான உப்பு விற்பனை?

வாலாஜாபாத், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் சின்னகடை, தனலட்சுமி நகரில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில், நேற்று முன்தினம், நுகர்வோர் ஒருவருக்கு ரேஷன் பொருட்களுடன் காலாவதியான உப்பு பாக்கெட் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.உப்பு பாக்கெட்டில் 2021, ஆகஸ்ட் மாதம் 'பேக்கிங்' செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் காலாவதியாகும் எனவும் அச்சிடப்பட்டு உள்ளது.அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் உப்பு காலாவதியாகி உள்ளது. அதை மீறி விற்பனை செய்யப்பட்டிருப்பதும் தெரிகிறது.இது குறித்து ரேஷன் கடை விற்பனையாளரிடம் கேட்டபோது, 'எங்களுக்கு கொடுத்த பொருளை வினியோகிப்பதோடு வேலை முடிந்துவிட்டது' என அலட்சியமாக பதில் கூறினர்.அப்பகுதி, குடும்ப அட்டைதாரர் ஒருவர் கூறியதாவது:தனலட்சுமி நகர் ரேஷன் கடையில், காலாவதியான உப்பு பாக்கெட் விற்பனை செய்தது தொடர்பாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்விக்கு இ - மெயில் வாயிலாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.மேலும், காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு, 'வாட்ஸாப்' வாயிலாகவும் தெரியப்படுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி