உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலைக்கு கிடைத்தது விமோசனம்

சாலைக்கு கிடைத்தது விமோசனம்

ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லுார் மண்டலம், 194வது வார்டு, ஈஞ்சம்பாக்கம், செல்வாநகர் விரிவு 2வது தெரு, 16 அடி அகலம் உடையது.இங்கு, 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சாலை புதுப்பித்து, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. லேசான மழைக்கே, சாலை, வீடுகளில் வெள்ளம் தேங்கும்.சாலையில், நாட்கணக்கில் மழைநீர் தேங்குவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. அப்பகுதிமக்கள், மழைநீரை வடிய செய்ய, கவுன்சிலர், அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.இதுகுறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், மோட்டார் வைத்து சாலையில் தேங்கிய மழைநீரை வடிய செய்தனர்.பருவமழை முடியும் வரை, மோட்டார் வைத்து வெள்ளத்தை வடிய செய்வதாகவும், அதன்பின் தார் சாலை போட உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். சாலை புதுப்பித்ததும் மழைநீர் தேங்காது எனவும், அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை