உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மணல் கடத்தல்: லாரி பறிமுதல் டிரைவர் தப்பி ஓட்டம்

 மணல் கடத்தல்: லாரி பறிமுதல் டிரைவர் தப்பி ஓட்டம்

சென்னை: சட்டவிரோதமாக மணல் கடத்தி வரப்பட்ட டிப்பர் லாரியை பறிமுதல் செய்த, சுங்கவரித்துறை அதிகாரிகள், போலீசில் ஒப்படைத்தனர். தப்பிய லாரி ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர். கோட்டூர்புரம், பொன்னியம்மன் கோவில் அருகே நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் புவியியல் மற்றும் சுங்கவரி அதிகாரி சுபத்ரால் குழுவினர், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை மடக்கியபோது, டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பினார். சட்டவிரோதமாக, 3 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி உரிமையாளர் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை