உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கருப்பு தீபாவளி வாழ்த்து போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள் கைது

கருப்பு தீபாவளி வாழ்த்து போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள் கைது

சென்னை: சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு எதிராக, 'கருப்பு தீபாவளி' வாழ்த்து போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள், 10 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மாநகராட்சியில், ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து, ஆக., 1ம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக, துாய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று ராயபுரம் மற்றும் திரு.வி.க., நகர் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதியில், ஆங்காங்கே துாய்மை பணியாளர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டி வந்தனர். போஸ்டரில், 'சென்னை மாநகராட்சி கமிஷனர் அவர்களே, சட்டத்திற்கு விரோதமாக 2,000 துாய்மைப் பணியாளர்களை 'ராம்கி' ஒப்பந்ததாரரிடம் வீசி எறிந்து, எமது வாழ்க்கையை இருளில் தள்ளிய உங்களுக்கு, எங்களது கருப்பு தீபாவளி வாழ்த்துக்கள்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தகவலறிந்த பெரியமேடு போலீசார், போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள், 10 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

D.Ambujavalli
அக் 21, 2025 18:17

அரசின் ஆட்டமெல்லாம் அப்பாவி அன்றாடம் காய்ச்சித் தூய்மைப் பணியாளர்களிடம்தான்


panneer selvam
அக் 21, 2025 18:11

Let us be practical instead of writing sentimental dialogue . Stalin ji was the first one privatize the scavenging work for two divisions in 1966 when he was the Mayor of Chennai. It is proven that privatesim has improved the efficiency of scavenging and people are happy with .Now totally 10 divisions , scavenging work has privatized and it is working good . Now out of remaining 5 divisions , two are getting privatized and as usual workers are agitating . It is proven , the private entrusted worked better than government sponsored work . So let the people will decide whether government has to do privatization for basic works or relay on government team


தமிழ்வேள்
அக் 21, 2025 17:10

தூய்மை பணியாளருக்கு , ஒப்பந்ததாரர் மாறும்போதெல்லாம், புதிய பணி நியமனமாக கணக்காம் ..சம்பளம் குறைந்து கொண்டே போகுமாம் ....ஆனால் , மாநகராட்சி தரும் தொகை மட்டும் குறையாமல் , மாறாக கூடுமாம் ..வித்தியாச தொகை யாருக்கு கப்பம் ? இப்படி தொழிலாளி வயிற்றில் அடிக்கும் திராவிடம் உருப்படுமா ?


KOVAIKARAN
அக் 21, 2025 09:33

கருப்பு தீபாவளி வாழ்த்து போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள் கைது. அதனால், காவல்துறைக்கு என்ன லாபம்? அந்த போஸ்டர் ஒட்டியதால் பொதுமக்களுக்கு என்ன இடையூறுகள் ஏற்பட்டுள்ளது? உண்மையைக்கூறியதற்காக எதற்காக அப்பாவி பணியாளர்களை கைது செய்யவேண்டும்? இது என்ன, சுதந்திரமடைந்த மாநிலமா அல்லது நமது மாநிலம்தான் சர்வாதிகார முதல்வரின் கீழ் செயல்படுகிறதா? இந்த கைது மூலம், தூய்மைப்பணியாளர்களின் கருப்பு தீபாவளி உணர்வு மேலும் ஊர்ஜிதப்பபடுத்தப்பட்டள்ளது.


Mani . V
அக் 21, 2025 05:28

கரூரில் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டிய திமுக ரௌடிகளை உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. உங்கள் வீரம் எல்லாம் அப்பாவி மக்களிடம் மட்டும்தான் செல்லும். இதற்கு மக்களின் வரிப்பணத்தில் உங்களுக்கு தண்டச் சம்பளம்.


சமீபத்திய செய்தி