மேயரின் வார்டு ஆபீஸ் முற்றுகை துாய்மை பணியாளர்கள் கைது
பெரம்பூர், துாய்மை பணியை தனியார் மயமாக்கியதை கைவிடக்கோரி, மேயர் பிரியாவின் வார்டு அலுவலகத்தை முற்றுகையிட்ட துாய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். துாய்மை பணியை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து, துாய்மை பணியாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள மேயர் பிரியாவின், 74வது வார்டு கவுன்சிலர் அலுவலகத்தை நேற்று, துாய்மை பணியாளர்கள் முற்றுகை யிட்டனர். மனு கொடுப்பதாக கூறி வந்தவர்கள், அலுவலகத்தை விட்டு வெளியேறாததால் போலீசார் கைது செய்தனர். இதேபோல், ராயபுரம், திரு.வி. க., நகர் மண்டலங்களில் உள்ள அனைத்து கவுன்சிலர் அலுவலகங்களையும், துாய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அனைவரையும் கைது செய்து, சமுதாய கூடத்தில் அடைத்து வைத்து, மாலையில் விடுவித்தனர். 1.02 லட்சம் டன் ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில் துாய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக, குப்பை தேங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில், இரு மண்டலங்களில், ஜூலை 19ம் தேதி முதல் இதுவரை, 1.02 லட்சம் டன் குப்பை அகற்றப்பட்டு ள்ளதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது.