உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திரு.வி.க., நகரில் குவிந்த துாய்மை பணியாளர்கள்

திரு.வி.க., நகரில் குவிந்த துாய்மை பணியாளர்கள்

ஓட்டேரி, திரு.வி.க., நகர் மண்டல அலுவலம் முன், 200க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரும் குவிக்கப்பட்டனர். துாய்மை பணியை தனியார் மயமாக்குவதை கண்டித்து, சென்னை ரிப்பன் மாளிகை முன், துாய்மை பணியாளர்கள் 13 நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், ஓட்டேரி அருகே ஸ்ட்ராஹான்ஸ் சாலையில் அமைந்துள்ள திரு.வி.க., நகர் மண்டல அலுவலகத்தில், உழைப்போர் உரிமை இயக்கத்தினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் ஒன்று கூடினர். போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்ற அச்சத்தில், 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும், மண்டல அலுவலர் சரவணனை சந்தித்து, கோரிக்கை மனுவை வழங்கினார். மனுவை, மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பி வைப்பதாக, மண்டல அலுவலர் உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை