உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  துாய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம்

 துாய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம்

துாய்மை பணியாளர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனால் தங்கள் போராட்டத்திற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடினர். அதை விசாரித்த நீதிபதிகள், நான்கு பேர் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி அளித்தனர். இதையடுத்து, அம்பத்துார், கல்யாணபுரம், மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள உழைப்போர் உரிமை இயக்கத்தின் அலுவலகத்தில், பெண் துாய்மை பணியாளர்கள் நான்கு பேர், நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கூறுகையில், 'மாநகராட்சியின், ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களைச் சேர்ந்த துாய்மை பணியாளர்களுக்கு, ஜூலை 31ம் தேதி வரை, நீடித்த பணி நிலைமையை, மாநகராட்சி மீண்டும் வழங்க வேண்டும். துாய்மை பணியாளர் பிரச்னையில் தமிழக முதல்வர் தலையிட்டு, தீர்வு காண வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை