துாய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்
அம்பத்துார், அம்பத்துார் மண்டலம், 84வது வார்டில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில், நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.இரண்டாவது நாளாக நேற்றும், அம்பத்துார் மண்டலத்தில், 12 வார்டுகளில் துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்பத்துார் மண்டல அலுவலகத்தை முற்றுகையிடவும் முயன்றனர். இதனால், அங்கு 75க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.அவர்களிடம், அம்பத்துார் மண்டலக் குழு தலைவர் மூர்த்தி பேச்சு நடத்தினார். துாய்மைப்பணியாளர்களுக்கு, தேவையான கையுறை, முக கவசம், துடைப்பம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.இதை ஏற்று அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டனர்.