உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சத் சங்க இசை விழா துவக்கம்

சத் சங்க இசை விழா துவக்கம்

மடிப்பாக்கத்தில் உள்ள சத்சங்கம் சார்பில், சத்சங்க பாபநாசம் சிவம் கர்நாடகா சங்கீத சபாவின், 35ம் ஆண்டு இசை, நடன, நாடக விழா, நேற்று நடந்தது.சென்னை ஐ.ஐ.டி.,யின் இயக்குனர் காமகோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விழாவை துவக்கினார். பின், சங்கீத வித்வான் மகாராஜபுரம் ராமகிருஷ்ணன், வீணை விதுஷி டாக்டர் ஜெயலட்சுமி ஆகியோருக்கு, சத்சங்க பாபநாசம் சிவன் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.விழாவில்,100 வயதை கடந்த மூத்த மிருதங்க வித்வான் மூர்த்தி, பங்கேற்று சிறப்பித்தார்.முதல் நாள் நிகழ்ச்சியாக அய்யப்பன், மீனாட்சிசுந்தரம் குழுவினரின் நாதஸ்வர கச்சேரி நடந்தது. வரும், 12ம் தேதி வரை கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ