உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளி பஸ் கவிழ்ந்து ஓட்டுனர் படுகாயம்

பள்ளி பஸ் கவிழ்ந்து ஓட்டுனர் படுகாயம்

மறைமலை நகர். செங்கல்பட்டு அடுத்த மலையடிவேண்பாக்கம் பகுதியில், தனியார் குளோபல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி பேருந்து, நேற்று காலை செங்கல்பட்டு அடுத்த கொளத்துார், வெண்பாக்கம் பகுதிகளில் உள்ள குழந்தைகளை அழைத்து வர சென்றது.பேருந்தை, செங்கல்பட்டு ஜெ.சி.கே., நகரைச்சேர்ந்த சந்தோஷ், 41, என்பவர் ஓட்டினார். வில்லியம்பாக்கம் - சாஸ்திரம்பாக்கம் சாலையில் சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.இதில் பலத்த காயமடைந்த சந்தோைஷ, அக்கம் பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.பேருந்தில் பள்ளிக் குழந்தைகள் யாரும் இல்லை. இது குறித்து, பாலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ