உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளிக்கல்வித்துறை கபடி போட்டி கண்ணகி நகர் அரசு பள்ளி கில்லி

பள்ளிக்கல்வித்துறை கபடி போட்டி கண்ணகி நகர் அரசு பள்ளி கில்லி

சென்னை: ஆசிய அளவிலான ஜூனியர் கபடி போட்டியில், இந்திய அணிக்காக தங்கம் வென்ற கார்த்திகா தலைமையிலான கண்ணகி நகர் அரசு பள்ளி அணி, பள்ளிக்கல்வி துறையின் வருவாய் மாவட்ட கபடி போட்டியில், முதலிடத்தை கைப்பற்றி அசத்தியது. பள்ளிக்கல்வித் துறையின் வருவாய் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள், செயின்ட் ஜார்ஜ் பள்ளி சார்பில், கீழ்ப்பாக்கத்தில் நேற்று நிறைவடைந்தன. இதில், 19 வயது பிரிவு இறுதிப் போட்டியில், கண்ணகி நகர் அரசு பள்ளி மற்றும் மாதவரம் செயின்ட் ஆன்ஸ் பள்ளி அணிகள் மோதின. கண்ணகி நகர் அரசு பள்ளி அணியில், ஆசிய போட்டியில் இந்திய அணிக்காக தங்கம் வென்ற கார்த்திகா கேப்டனாக இடம் பெற்று இருந்தார். விறுவிறுப்பான ஆட்டத்தில், 19 - 1 3 என்ற புள்ளிக்கணக்கில் கண்ணகி நகர் அணி வெற்றி பெற்று, முதலிடத்தை கைப்பற்றியது. மூன்றாம் இடத்தை போரூர் அரசு பள்ளியும், நான்காம் இடத்தை மகரிஷி பள்ளியும் கைப்பற்றின. அதேபோல், 14 வயது பிரிவு இறுதிப் போட்டியில், கே.கே., நகர் நிர்மலா பள்ளி, 35 - 17 என்ற புள்ளி கணக்கில், திருவான்மியூர் சென்னை அரசு பள்ளியை தோற்கடித்து, முதலிடத்தை வென்றது.

விநாயகா மிஷன்

பல்கலை அணி அபாரம்

சென்னை விநாயகா மிஷன் பல்கலை சார்பில், தென்மண்டல பல்கலைகளுக்கு இடையிலான மகளிர் கபடி போட்டி, பையனுாரில் உள்ள பல்கலை வளாகத்தில் நடக்கிறது. இதில், தமிழகம் உட்பட தென்மாநில அளவிலான, 70 பல்கலை அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடந்த 'நாக் அவுட்' ஆட்டங்களில், அண்ணா பல்கலை அணி, 32 - 10 என்ற புள்ளிக்கணக்கில், ஆந்திரா பல்கலை அணியையும், ஜேப்பியார் பல்கலை அணி, 51 - 41 என்ற புள்ளிக் கணக்கில், கோழிக்கோடு பல்கலை அணியையும் வென்றன. அதேபோல், விநாயகா மிஷன் பல்கலை அணி, 39 - 14 என்ற புள்ளிக்கணக்கில், கர்நாடகாவி ன் ராஜிவ்காந்தி பல்கலை அணியை வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி