மேலும் செய்திகள்
மாணவி தற்கொலை; உறவினர்கள் மறியல்
11-Nov-2024
மடிப்பாக்கம், நவ. 27-மடிப்பாக்கம், தெற்கு ராம் நகர், 9வது தெருவைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் மகள் ஹரிணி, 15; வேளச்சேரி, டி.ஏ.வி., பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். ஹரிணியின் தாய் ராஜேஸ்வரி, வீட்டின் 4வது தளத்தில், மொட்டை மாடியில் துணிகளை உலர வைத்திருந்தார்.மழை வருவதுபோல் இருந்ததால், நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, மகள் ஹரிணி, மாடியில் காய வைத்த துணிகளை எடுக்கச் சென்றார்.அப்போது, கால் இடறி, 4வது மாடியிலிருந்து தவறி விழுந்தார். இதில், ஹரிணிக்கு இடுப்பு எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மடிப்பாக்கம் போலீசார், ஹரிணி உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
11-Nov-2024