உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயில் நிலையம் அருகே ஸ்கூட்டர் திருடியவர் கைது

ரயில் நிலையம் அருகே ஸ்கூட்டர் திருடியவர் கைது

திருவொற்றியூர், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரை திருடிச் சென்றவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர், அண்ணாமலை நகர், 7வது தெருவைச் சேர்ந்தவர், செந்தில், 45; தனியார் நிறுவன ஊழியர். கடந்த 22ம் தேதி, தன் 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில், திருவொற்றியூர் ரயில் நிலையத்திற்கு சென்றார். அங்கு சாலையோரம் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, ரயிலில் சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு, திரும்பி வந்து பார்த்தபோது, ஸ்கூட்டர் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த விக்ரம், 38, என்பவர், திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து, மூன்று 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி