உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காஞ்சியில் யூத் வீரர்கள் தேர்வு

காஞ்சியில் யூத் வீரர்கள் தேர்வு

சென்னை, தமிழ்நாடு யூத் மாநில வாலிபால் போட்டி, வேலுார் வி.ஐ.டி., வளாகத்தில், நவ., 2 முதல் 5ம் தேதி வரை நடக்க உள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட வீரர், வீராங்கனையர் அணிகள் பங்கேற்கின்றன. இதில், காஞ்சிபுரம் யூத் வீரர், வீராங்கனையர் தேர்வு முகாம், வரும் 26ம் தேதி மாலை, 3:00 மணிக்கு, மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.கடந்த 2002 ஜன., 1ம் தேதிக்கு பின் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். விபரங்களுக்கு, 99625 77917, 99940 92386 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட வாலிபால் சங்கம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ