உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடிகையருக்கு மெத் ஆம்பெட்டமைன் விற்பனை: துணை நடிகை வாக்குமூலம்

நடிகையருக்கு மெத் ஆம்பெட்டமைன் விற்பனை: துணை நடிகை வாக்குமூலம்

சென்னை : கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு, எனக்கு தெரிந்த நடிகையருக்கு, போதைப்பொருள் விற்பனை செய்து வந்தேன்' என, கைதான துணை நடிகை மீனா வாக்குமூலம் அளித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டை உட்ஸ் சாலையில் உள்ள வணிக வளாகம் அருகே, நேற்று முன்தினம், ஐந்து கிராம், 'மெத் ஆம்பெட்டமைன்' என்ற போதைப் பொருளுடன், துணை நடிகை மீனா, அண்ணா சாலை காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டார்.அவர் போலீசிடம் அளித்த வாக்குமூலம்:என் பெயர் எஸ்தர். சினிமா மற்றும் 'டிவி' சீரியல்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக, மீனா எனப் பெயரை மாற்றிக் கொண்டேன். எனக்கு திருமணமாகி, 6 வயதில் மகன் உள்ளான். கணவரை பிரிந்து வாழ்கிறேன்.சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக, சேலத்தில் இருந்து சென்னை வந்து, கோவிலம்பாக்கம் வெள்ளக்கோவில் கண்ணதாசன் தெருவில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறேன்.ஆர்யா நடித்த 'டெடி' உள்ளிட்ட படங்களிலும், சுந்தரி என்ற 'டிவி' சீரியலிலும் நடித்து வருகிறேன். துணை நடிகை என்பதால், எனக்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.என் ஆடம்பர செலவுக்கு ஏற்ப, போதிய வருமானம் இல்லை. சினிமா வாய்ப்புக்காக, 'பப்' மற்றும் பார்ட்டிகளில் பங்கேற்று வந்தேன்.அப்போது 'பப்' ஒன்றில், ராஜேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் நட்பாக பழகி வந்தேன். அவர்தான் எனக்கு போதைப் பொருள் பழக்கத்தை ஏற்படுத்தினார்.அவர் 10,000 ரூபாய்க்கு, மெத் ஆம்பெட்டமைன் விற்று கொடுத்தால், கமிஷனாக, 3,000 ரூபாய் தருவார். அவர் என்னை சந்திக்கும் இடங்களை மாற்றிக்கொண்டே இருப்பார். அவரிடம் மெத் ஆம்பெட்டமைன் வாங்கி, எனக்கு தெரிந்த சீரியல் மற்றும் சினிமா நடிகையருக்கு விற்று வந்தேன்.இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை