உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் உயர்வு

செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் உயர்வு

குன்றத்துார்,சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி, 3.645 டி.எம்.சி., கொள்ளளவும், 24 அடி நீர் மட்டமும் கொண்டது.பூண்டி ஏரி நீர் வரத்து மற்றும் பருவமழையால், இந்த ஏரிக்கு, ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இதனால், ஏரியின் நீர் மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.கடந்த மாதம் நீர் மட்டம், 13 அடியாக இருந்தது. நேற்றைய நிலவரப்படி நீர் மட்டம், 15.29 அடியாகவும்; கொள்ளளவு, 1.585 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு, 385 கன அடி நீர் வருகிறது. குடிநீர் தேவைக்கு, 133 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை