உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று மனம் திறக்கிறார் செங்கோட்டையன்

இன்று மனம் திறக்கிறார் செங்கோட்டையன்

கோபி : கட்சியில் அதிருப்தியில் உள்ள ஈரோடு மாவட்டம் கோபி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செங்கோட்டையன், இன்று மனம் திறந்து பேசவுள்ளதாக அறிவித்துள்ளார்.நேற்று கோபி அருகே திருமண மண்டப திறப்பு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்றார். தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகியதாக அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிவித்தது குறித்து நிருபர்கள் கேட்டனர். ''அவரது மனதில் என்ன எண்ணம் உள்ளது என்பதை, அவரிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு சரி என பட்டதை அவர் செய்திருப்பார். அது குறித்து நான் எதுவும் சொல்வது பொருத்தமாக இருக்காது,'' என்றார். இந்நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சரான செங்கேட்டையன், இன்று கோபியில் மனம் திறந்து பேச உள்ளதாக அறிவித்துள்ளார்.

பழனிசாமி தரப்பில் சமாதானமா

அடுத்து, ''அ.தி.மு.க., தலைமையிடம் முரண்பட்டு நிற்கும் உங்களை, பா.ஜ., தலைமை சமாதானப்படுத்த முயன்றதா அல்லது பழனிசாமி தரப்பினர் உங்களிடம் பேசினரா,'' என கேட்டனர். ''செப்., 5ல், இவை எல்லாவற்றுக்கும் பதில் சொல்வேன் என ஏற்கனவே சொல்லி விட்டேன்.அதன் அடிப்படையில், செப்., 5ல் விபரமாக பேசுவேன்,'' என கூறி கைகூப்பி கும்பிடு போட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Haja Kuthubdeen
செப் 05, 2025 09:22

கட்சியில் குழப்பம் ஏற்பட முயற்சிக்க வேண்டாம்.இருக்கும் மரியாதையை தக்க வைத்து கொள்வதே நல்லது.


Jagannathan Narayanan
செப் 05, 2025 06:54

He will join in mother katchi


பங்கஜம்
செப் 05, 2025 06:49

அப்பறம் என்ன அனைத்து பத்திரிக்கையாளர்களும் அவர் வீட்டு வாசலில் காத்துக் கொண்டு இருங்க.


Kasimani Baskaran
செப் 05, 2025 05:34

இதுநாள் வரை மனதை சிறை வைத்து இருந்தார்.. திராவிடச்சூழ்ச்சியை விட வேறு ஒரு சூழ்ச்சியும் வெல்லாது.. தமிழை பொத்திப்பொத்தி பாதுகாத்து வளர்ந்ததே அதை கேவலப்படுத்திய ராமசாமியும், பழைய புத்தகக்கடையில் திருடிய கவிதைகளை வடித்த முத்தமிழ் வித்தவரும் என்று நம்பும் அப்பாவி தமிழர்கள் இருக்கும் வரை திராவிட சாம்ராட்ஜியத்தை அசைத்துப்பார்க்கவே முடியாது.


Perumal Pillai
செப் 05, 2025 05:18

In the admk all are zeroes with EPS being the big zero.


Mani . V
செப் 05, 2025 05:16

மனம் திறந்து? ஒரு அம்மன் சல்லிக்கும் பிரயோசனமில்லை. ஒருவேளை ராமதாஸ் மாதிரி ரெண்டாம் தாரம் இருக்கும்னு சொல்ல வாய்ப்பிருக்கு.


Farmer
செப் 05, 2025 05:04

டம்மி பீஸ் ...... இது வரைக்கும் ஒன்னும் செய்யல ....இன்னும் ஒன்னும் செய்ய போறதில்ல


மணி
செப் 05, 2025 02:56

எண்ண கொடுத்தாலும் தேற மாட்டான். இவனால் கட்சி அல்ல கட்சியால் தாண் இவன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை