உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மூத்த குடிமக்கள் உறைவிட பணி டிசம்பரில் முடியும்

மூத்த குடிமக்கள் உறைவிட பணி டிசம்பரில் முடியும்

சென்னை :''கொளத்துாரில் நடந்து வரும் மூத்த குடிமக்கள் உறைவிட கட்டுமான பணிகள், இந்தாண்டு டிசம்பருக்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சென்னை எழும்பூர், வில்லிவாக்கம், கொளத்துாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தபின், அவர் அளித்த பேட்டி:கொளத்துார் ராஜாஜி நகரில், 100 பேர் தங்கும் வகையில், பல்வேறு வசதிகளுடன் மூத்த குடிமக்கள் உறைவிட கட்டுமான பணி நடந்து வருகிறது.உறைவிடப்பணிகள் வரும் டிசம்பருக்குள் முடிக்கப்பட்டு, மூத்த குடிமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.இந்த உறைவிடத்தை பராமரிக்க, முன்னணி நிறுவனங்களிடம் இருந்து, 5 கோடி ரூபாய் சமூக பொறுப்பு நிதி கிடைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ