உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சீனியர் வாலிபால் போட்டி ஜி.எஸ்.டி., - ஐ.டி., அணிகள் அரையிறுதிக்கு தகுதி

சீனியர் வாலிபால் போட்டி ஜி.எஸ்.டி., - ஐ.டி., அணிகள் அரையிறுதிக்கு தகுதி

சென்னை, மாநில அளவிலான சீனியர் வாலிபால் போட்டி, ஆடவர் பிரிவில், சென்னை ஜி.எஸ்.டி., மற்றும் வருமான வரித்துறை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.தமிழ்நாடு வாலிபால் சங்கம் சார்பில், மாநில அளவில் சீனியர் வீரர் மற்றும் வீராங்கனையருக்கான, 71வது வாலிபால் சாம்பியன்ஷிப் தொடர், சென்னையில் நடந்து வருகிறது.இதில், 24 அணிகள் மோதுகின்றன. இதன் ஆடவருக்கான காலிறுதி இரண்டாவது நாள் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதன் முதல் காலிறுதி போட்டியில், சென்னை ஜி.எஸ்.டி., அணி, 26 - 24, 26 - 24, 25 - 14 என்ற செட் புள்ளியில் எதிர்த்து விளையாடிய, எஸ்.ஆர்.எம்., அகாடமி அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அடுத்து நடந்த இரண்டாவது போட்டியில், வருமான வரித்துறை அணி, 25 - 15, 25 - 21, 25 - 20 என்ற செட் புள்ளியில், கோவை மேற்கு மண்டல போலீஸ் அணியை வீழ்த்தி, அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை