மேலும் செய்திகள்
மணலியை பிரிக்காதீர் முதல்வருக்கு கோரிக்கை
11-Mar-2025
மணலி, சடையங்குப்பத்தில், நிலவும் குடிநீர் பிரச்னையால் மக்கள், வீதிக்கு வந்து போராடும் சூழல் ஏற்பட்டுள்ளது.சென்னை, மணலி மண்டலம், 16 வது வார்டு, சடையங்குப்பம் கிராமத்தில், 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 2,000 க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.இங்கு, குடிநீர் வாரியம், குழாய் வழியாக குடிநீர் வினியோகம் செய்கிறது. தவிர, ஊருக்குள், தண்ணீர் தொட்டி ஒன்றும் உள்ளது.இந்நிலையில், பர்மா நகரில் அழுத்தம் குறைவாக இருப்பதால், சடையங்குப்பம் கிராமத்திற்கு குடிநீர் ஏறுவதில்லை. விளைவு, குழாய்களில் குடிநீர் சொட்டு சொட்டாக வடிகிறது.அதை பிடிப்பதற்கு, பெண்கள் மணிக்கணக்கில், குழாயடியில் காத்து கிடக்கின்றனர். ஊருக்குள் உள்ள தொட்டியில் நிரப்பப்படும் குடிநீரும் போதுமானதாக இல்லை.இது றித்து, பலமுறை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இதே நிலை நீடித்தால், ஏப்., - மே மாதங்களில் குடிநீர் பஞ்சத்தால் மக்கள் வீதிக்கு வந்து போராடும் சூழல் ஏற்படும்.எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, சடையங்குப்பம் குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
11-Mar-2025