நாள் கணக்கில் தேங்கிய கழிவுநீர் துரைப்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு
துரைப்பாக்கம் சோழிங்கநல்லுார் மண்டலம், 193வது வார்டு, துரைப்பாக்கம், ஸ்டேட் பேங்க் ஆப் காலனி, ஸ்ரீபுரம் ஒன்றாவது தெருவில், 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்கு, தனியாருக்கு சொந்தமான சில காலியிடங்கள் உள்ளன. சுற்றியுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, இந்த காலி இடத்தில் விடுகின்றனர்.இதனால், குளம் போல் கழிவுநீர் தேங்கி, கொசு தொல்லை அதிகரித்து, பகுதிவாசிகள் துாக்கம் இல்லாமல் தவிக்கின்றனர்.இந்த காலியிடத்தை ஒட்டி, சாலையோரத்தில் குப்பை கொட்டுகின்றனர். அழுகிய குப்பை நாள் கணக்கில் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தொற்று நோய் பரவ குப்பையும், கழிவுநீரும் காரணமாக இருக்கிறது.மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதிவாசிகள் கூறினர்.உயர் அதிகாரிகள் தலையிட்டு, கழிவுநீரை வெளியேற்றி, குப்பையை அகற்றி, காலியிடத்தை சுகாதாரமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.விமான நிலைய இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் வெகுமதி