கழிவுநீர் உந்து நிலையம் 2 மண்டலங்களில் மூடல்
சென்னை, காந்தி - இர்வின் சாலையில், கழிவுநீர் உந்து குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சரி செய்யும் வகையில், ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் சில இடங்களில், கழிவுநீர் உந்து நிலையம் தற்காலிகமாக செயல்படாது என, குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:ராயபுரம் மண்டலம், காந்தி இர்வின் சாலையில், கழிவுநீர் உந்து குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சரி செய்யும் பணி, நாளை இரவு 10:00 மணி முதல் 22ம் தேதி காலை 10:00 மணி வரை நடைபெற உள்ளது.எனவே, ராயபுரம் மண்டலம் எல்.ஜி., சாலை, லிங்க் சாலை, தெற்கு கூவம் சாலை, காந்தி - இர்வின் சாலை ஆகியவற்றின் கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது.அதேபோல், தேனாம்பேட்டை மண்டலம் கிரீம்ஸ் சாலை, கிரியப்பா சாலை, ஜி.என்.செட்டி சாலை, குமரப்பா சாலை, சுதந்திர தின பூங்கா, சாலை தீவு பகுதிகளில், கழிவுநீர் உந்து நிலையங்கள், 12 மணி நேரம் தற்காலிகமாக செயல்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.