உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பர்கிட் சாலையில் தேங்கும் கழிவுநீர்

பர்கிட் சாலையில் தேங்கும் கழிவுநீர்

கோடம்பாக்கம் மண்டலம், தி.நகரில் பர்கிட் சாலை உள்ளது. தி.நகர் உஸ்மான் சாலையில், மேம்பால பணிகள் நடப்பதால், இச்சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.சமீபத்தில் பெய்த மழை நீர் தேங்கியதால், இச்சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளது. அத்துடன், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளது.இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமப்பட்டனர். அடிக்கடி பர்கிட் சாலையில் கழிவுநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மணிமாறன், தி.நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை