உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுடுகாடு அருகே சாலையில் கழிவுநீர்  தேங்கி பாதிப்பு

சுடுகாடு அருகே சாலையில் கழிவுநீர்  தேங்கி பாதிப்பு

வளசரவாக்கம் மண்டலம் 155வது வார்டு ராமாபுரத்தில், வள்ளுவர் சாலை உள்ளது. இச்சாலை, வளசரவாக்கம், ராமாபுரம் மற்றும் பரங்கிமலை -- பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் பிரதான சாலை. இச்சாலையில், மாநகராட்சி சுடுகாடு உள்ளது.இதன் அருகே, பாதாள சாக்கடையில் ஒரு மாதமாக அடைப்பு ஏற்பட்டு, இயந்திர நுழைவு மூடி வாயிலாக கழிவுநீர் கசிந்து, சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அடைப்பை சரிசெய்ய, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரஞ்சித், வளசரவாக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை