பாலியல் புரோக்கர் கைது 11 பெண்கள் மீட்பு
சென்னை,சென்னை, தேனாம்பேட்டை காவல் நிலைய எல்லையில், தி.நகர், டாக்டர் பி.என்.சாலையில் உள்ள, ஸ்பா ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தேனாம்பேட்டை போலீசார், அந்த இடத்தில் நேற்று சோதனை செய்தனர். அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட தங்க வைக்கப்பட்டு இருந்த, வெளி மாநில பெண்கள் 11 பேரை மீட்டனர். இவர்களை பாலியல் தொழிலில் தள்ளிய, சென்னை ராயப்பேட்டை இருசப்பன் தெருவைச் சேர்ந்த, புரோக்கர் ஜாகீர் உசேன்,41 என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.