உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமிக்கு பாலியல் தொல்லை; குற்றவாளிக்கு ஏழு ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை; குற்றவாளிக்கு ஏழு ஆண்டு சிறை

திருவள்ளூர்; திருவள்ளூர் அருகே, 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆவடி காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் மோசஸ், 43. இவர், 2017ம் ஆண்டு, ஜூலை 12ம் தேதி, தன் வீட்டின் அருகே விளையாடிய 6 வயது சிறுமியிடம், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து, பட்டாபிராம் மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிந்து, அவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையில், நீதிபதி உமா மகேஸ்வரி, மோசஸ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபாராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 3 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க, அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் மோசஸ் ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ