உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அண்ணாநகர், திருமங்கலத்தில் ஷேர் ஆட்டோக்களின் அடாவடி

அண்ணாநகர், திருமங்கலத்தில் ஷேர் ஆட்டோக்களின் அடாவடி

அண்ணா நகர், அண்ணா நகர், திருமங்கலம், வில்லிவாக்கம் பகுதிகளில், சிக்னல்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் விதிமீறும் ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளது. சென்னையின் மற்ற இடங்களை விட, அண்ணா நகரை சுற்றியுள்ள பகுதிகளில், 'ஷேர்' ஆட்டோக்களின் பயன்பாடு அதிகளவில் உள்ளது. குறிப்பாக, திருமங்கலம் சிக்னல் பகுதியில் இருந்து கோயம்பேடு, பாடி, அம்பத்துார் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பயணிப்போர் அதிகம். இந்த 'ஷேர்' ஆட்டோக்களால் காலை மற்றும் மாலை நேரங்களில், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது :அண்ணா நகர், திருமங்கலம், வில்லிவாக்கம் சந்திப்பில், போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் விதமாக, சாலைகளை ஆக்கிரமித்து, ஷேர் ஆட்டோக்களை நிறுத்துகின்றனர். குறிப்பாக சிக்னல்கள், பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பகுதியில், சாலையோரத்தை ஆக்கிரமித்து ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன.அந்த நேரத்தில் அரசு பேருந்துக்காக, நிறுத்தில் காத்திருக்கும் பயணியருக்கு இடையூறாக வழிமறித்து நிறுத்துகின்றனர். சாலையோரம் செல்வோரை கண்டால், ஆட்டோவை திடீரென அங்கும் இங்குமாக நிறுத்துவதால், பின்னால் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இதை கண்டிக்கும் வாகன ஓட்டிகளை, மரியாதை குறைவாக பேசி மிட்டரல் விடுக்கின்றனர். விபத்து ஏற்படுத்தும் விதமாக, விதிமீறலில் ஈடுபடும், ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை