மேலும் செய்திகள்
அய்யப்பன் கோவிலில் வருஷாபிஷேகம் விமரிசை
24-Nov-2024
மணலி:மணலி, பெரியதோப்பு, சிவ - விஷ்ணு ஜோதி அய்யப்ப சுவாமி தேவஸ்தானம் பிரசித்திப் பெற்றது. இங்கு, ஆண்டுதோறும், திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பர்.அந்தவகையில், இந்தாண்டு 54ம் ஆண்டு திருவிளக்கு பூஜை - 39ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா, டிச., 4ம் தேதி, ஆச்சாரிய வர்ணம், சுத்தி கலசத்துடன் துவங்கியது. பின், 5ம் தேதி, மஹா கணபதி ஹோமம், லட்சார்ச்சனை, சிவன் கலச அபிஷேகம், உச்ச பூஜை உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து, 6ம் தேதி, குருவாயூரப்பன் கலச பூஜையும், நேற்று முன்தினம், கணபதி, நாகராஜா, பாலமுருகன், ஆஞ்சநேயர், ராஜராஜேஸ்வரி அம்மன், அய்யப்பன் சுவாமிக்கும் கலச அபிஷேகம், மஹா தீபாரதனை நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான, திருவிளக்கு பூஜை ஊர்வலம், நேற்று மாலை நடந்தது. முன்னதாக, பிரமாண்ட மலர் அலங்காரத்தில், அய்யப்ப சுவாமி எழுந்தருளினார்.தொடர்ந்து, பஞ்சவாத்தியம், சிங்காரி மேளத்துடன், திருவிளக்கு பூஜை ஊர்வலம் புறப்பட்டது. இதில், 3 வயது சிறுமி முதல், 70 வயது வரையிலான மூதாட்டி என, 3,000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.ஊர்வலமானது, பாரதியார் தெரு, திருவேங்கடம் தெரு, திரு.வி.க., தெரு, சின்னசேக்காடு - மாணிக்கவாசகர் தெரு, மணலி - பாடசாலை தெரு, பெரியதோப்பு - சொக்கம்மாள் குளத்தெரு, நெடுஞ்செழியன் தெரு வழியாக வந்து, இரவு சன்னிதானம் வந்தடைந்தது.திருவிளக்கு பூஜை ஊர்வலத்திற்காக, சிறிது நேரம் போக்குவரத்து மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. விழாவிற்கான ஏற்பாடுகளை, சிவ - விஷ்ணு ஜோதி அய்யப்ப சுவாமி தேவஸ்தானம் நிர்வாக குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
24-Nov-2024