உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளிக்கு கத்தியுடன் வந்த மாணவரால் அதிர்ச்சி

பள்ளிக்கு கத்தியுடன் வந்த மாணவரால் அதிர்ச்சி

பெரம்பூர், பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளி 10ம் வகுப்பு மாணவன், நேற்று முன்தினம் கத்தியுடன் பள்ளிக்கு சென்றுள்ளான். சக மாணவன், இது குறித்து ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார். பள்ளி நிர்வாகம், சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோரை வரவழைத்து, மாணவனிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கினர்.இந்த நிலையில், தான் கத்தி கொண்டு வந்தது குறித்து ஆசிரியையிடம் தெரிவித்த மாணவனை, பள்ளி வளாகத்திலேயே நண்பர்களுடன் சேர்ந்து, சரமாரியாக தாக்கியுள்ளார்.இது குறித்து செம்பியம் போலீசில், பள்ளி முதல்வர் புகார் அளித்தார். போலீசார், சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து பேசி, எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை