வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இவர்களையும் இவர்கள் குடும்பத்தையும் சேர்த்து அழிக்க வேண்டும் . நாடு நன்றாகும் .
மனசாட்சி இல்லாத கயவர்கள்
மேலும் செய்திகள்
லஞ்சம் வாங்க தனியறை... 'வெளங்குமா' கனிமவளத்துறை!
26-Nov-2024
சென்னை, சென்னையைச் சேர்ந்த, 62 வயது தொழில் அதிபர் ஒருவர், பங்கு சந்தை முதலீடு தொடர்பாக, 'யு டியூப்'பில், மோதிலால் ஒஸ்வால் மற்றும் எஸ்.பி.ஐ., செக்யூரிட்டீஸ் என்ற விளம்பரத்தை பார்த்து உள்ளார்.அதில் இருந்த மொபைல் போன் எண்களின் 'வாட்ஸாப்'பில் தகவல் அனுப்பி உள்ளார் பங்கு சந்தை முதலீடு தொடர்பாக, இரண்டு போலி இணைய தளங்கள் வாயிலாக, 'டிமேட்' எனும் பங்குசந்தையில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான கணக்கு துவங்க வலியுறுத்தி உள்ளனர்.அந்த கணக்கில் அனுப்பிய, 1.66 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இது குறித்து, www.cybercrime.gov.inஎன்ற இணையதளத்தில் புகார் அளித்துள்ளார்.இது குறித்து, சென்னை அசோக் நகரில் உள்ள, சைபர் குற்றத்தடுப்பு பிரிவு, தலைமையக கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னையைச் சேர்ந்த முகமது இஸ்மாயில், 35, திருப்பூரைச் சேர்ந்த அபுதாஹீர், 43, கலீல் அகமது, 43, கேசவராஜ், 41, ஆகியோரை கைது செய்துள்ளனர்.விசாரணையில், முகமது இஸ்மாயில், சென்னையில் ஓட்டுனராக பணிபுரிவது போலவும், மற்ற மூவரும் திருப்பூர் மறுசுழற்சி செய்யப்பட்ட ஆடைகளை ஏற்றுமதி செய்பவர்கள் போல வலம் வந்து, வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து, 'கம்போடியா' உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.இவர்களும், கம்போடியாவுக்கு சென்று கூட்டாளிகளுடன் சேர்ந்து, 'ஆன்லைன்' வாயிலாக கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததும் தெரியவந்தது.முகமது இஸ்மாயில், அபுதாஹிர், கேசவராஜ் ஆகியோர் தமிழகத்தில் கைதான நிலையில், கலீல் அகமது, கம்போடியாவில் இருந்து, தமிழகத்திற்கு திரும்பிய போது கைதாகி உள்ளார்.
இவர்களையும் இவர்கள் குடும்பத்தையும் சேர்த்து அழிக்க வேண்டும் . நாடு நன்றாகும் .
மனசாட்சி இல்லாத கயவர்கள்
26-Nov-2024