உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடையின் பூட்டை உடைத்து போன், ரூ.20,000 திருட்டு

கடையின் பூட்டை உடைத்து போன், ரூ.20,000 திருட்டு

வானகரம்,:வானகரத்தில், கடையின் பூட்டை உடைத்து 20,000 ரூபாய் மற்றும் மொபைல் போன் திருடிய நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். திருவேற்காடு, ஜெ.ஜெ., நகரைச் சேர்ந்தவர் ஆகாஷ், 25. இவர், வானகரம், ஓடமா நகர் பிரதான சாலையில் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல, நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாப் பெட்டியில் வைத்திருந்த 20,000 ரூபாய் மற்றும் ஒரு மொபைல் போன் திருடு போனது தெரிய வந்தது. புகாரையடுத்து, வானகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ