ரயிலில் ஏறும்போது தவறி விழுந்து எஸ்.ஐ., உயிரிழப்பு
சென்னை,சென்னை, அண்ணா நகர், காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் செந்தில்குமார், 55. அங்குள்ள குற்றப்பிரிவு காவல் நிலையத்தில், சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தார். மருத்துவ விடுப்பில் இருந்த செந்தில்குமார், சொந்த வேலை காரணமாக, வேலுார் மாவட்டம் காட்பாடிக்கு சென்றுள்ளார். அவர், நேற்று காலை, 5:30 மணியளவில், காட்பாடியில் இருந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வர, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஓடி வந்து ஏற முயன்றுள்ளார். அப்போது, நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்து பலியானார். காட்பாடி ரயில்வே காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.