மேலும் செய்திகள்
'பாரில்' கத்தியுடன் திரிந்த திருடர்கள் கைது
28-Nov-2024
காசிமேடு, காசிமேடு மீன்பிடித் துறைமுகம் பகுதியில், நேற்று காலை வாலிபர் ஒருவர் கத்தியுடன் அப்பகுதிவாசிகளை அச்சுறுத்தி வந்துள்ளார்.அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காசிமேடு மீன்பிடித் துறைமுக போலீஸ் எஸ்.ஐ., ஆனந்திக்கு, தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு வந்த ஆனந்தி உள்ளிட்ட போலீசார், அந்த வாலிரை மடக்கி பிடித்து, அவரிடம் இருந்த கத்தியை பிடுங்கினர்.விசாரணையில், பிடிபட்ட நபர், காசிமேடு, இந்திரா நகரைச் சேர்ந்த அஜித், 28, என்பதும், அவர் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து, 1 அடி நீளமுள்ள கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
28-Nov-2024